Saturday, January 27, 2007

புகைவண்டிப் பயணத்தில்...

இவ்வளவு நாள் இடைவெளிக்கு என்னை நானே நொந்து கொள்கிறேன். சில நாட்கள் வேலை காரணமாக... பல நாட்கள் சோம்பேறித்தனம் காரணமாக... சரி இன்று எப்படியாவது எழுதித் தீர்வது என்ற முடிவில்...

புகை வண்டியில் பலதரப்பட்ட மக்களைக் காணலாம். நான் பயணம் செய்பவர்களைப் பற்றிப் பேச வரவில்லை. பயணம் செய்பவர்களிடம் நயினம் செய்பவர்களைப் பற்றித்தான் இந்தப் பேச்சு... புத்தகமோ பொருட்களோ விற்பனை செய்பவர்கள்... அதிலும் உடல் ஊனமுற்றவர்கள் பெருநம்பிக்கையுடன் தொழில் செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கே நாம் பேசப்போவது, அதிலும் ஊனமுற்றவர்களைப் போல் நடித்து, நமது ஈதல் குணத்தினை இரக்கக் குணத்தால் மிகுதிப் படுத்தி, சில நேரம் நமக்குப் பயனில்லாதவற்றையும் நம் தலையில் கட்டிவிடும் நம்மவரைப் பற்றித்தான்.

இவர்களை எந்த வகையில் சேர்ப்பது... பொய் சொல்லிப் பிழைப்பவர்கள் என்பதா? பிச்சை எடுக்கவில்லையே, உழைத்துத்தானே பிழைக்கிறார்கள், பொய் சொன்னால் பரவாயில்லை என்பதா? இல்லை, நுகர்வோரைக் கவரப் பல பொய்களைச் சொல்லிப் பல்லாயிரம் ரூபாய்களை அள்ளும் பெரிய விளம்பரங்களைப் போல அல்லாமல் இவர்கள் பொய்யின் மதிப்பு மிக அற்பம் என்பதால் மன்னித்துவிடுவதா? அல்லது, அவர்களைப் போல் இவர்களும் நுணுக்கமாக நம்மை ஏமாற்றுவதை நினைத்து வியப்பதா?

நீங்களே சொல்லுங்கள்...