Sunday, July 28, 2013

நீண்ட இடைவெளிக்குப் பிறகு...

"வாழ்க்கை என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது"... ம்ம்ம்... அது சரியா? "நான் தான் என் வாழ்க்கையை நடத்திச் செல்கிறேன்"... இல்லை. அதுவும் எங்கேயோ இடிக்கிறது. ஓ.. இப்பொழுது எனக்கு குடும்பம் இருக்கிறது... அப்படியானால், "நாங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கிறோம்" என்பது தான் சரி.

நான் வேலை செய்யும் அலுவகம் இல்லை என்றால் நான் இப்பொழுது அமெரிக்காவில் இருக்க மாட்டேன். என் வாழ்க்கை இப்படி இருக்க அவர்களுக்கும் பங்கு இருக்கிறது. அட மறமண்டையே! உன் பெற்றோர்கள் உன்னை வளர்க்காமல், படிக்க வைக்காமல், தெருவில் விட்டிருந்தால்? மறந்து விட்டேனே!

வயிற்றுக்கு உன்ன உணவு, உடுக்க உடை, பிரயாணிக்க வண்டிகள், இருக்க வீடு, உரையாட தொழில்நுட்ப வசதிகள்... (அட கோழி பிரியாணிக்கும் கூட தான்)... உற்றார் உறவினர்களும் நண்பர்களும் முக்கிய பங்கு வகுத்திருக்கிறார்கள்...

இப்படி எவ்வளவு பேர் என்னுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்கள், வளப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் நான் "என்னால் தான் எல்லாம்" என்று பிதற்றிக்கொண்டிருக்கிறேன்... ச்சே...

No comments: