ஏற்கனவே சொன்னபடி , அந்த அமைதியான இடத்தில் காலடி எடுத்து வைத்தோம். நேராக இயக்குனர் மற்றும் இணைநிறுவனர் முனைவர். சா(ஜா)ன் சாமுவேல் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். பார்க்க மிகவும் எளிமையான உடையில், கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் மேசை நிறையப் புத்தகங்கள்... அவரே எழுதியவை பல, அவர் முன்னுரை எழுதியவை சில, ஆய்வு சம்பந்தப்பட்டவை சில என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அறைக்குள் நுழைந்த எங்கள் அனைவரையும் எழுந்து நின்று வரவேற்றார்(எங்களனைவருக்கும் பெரும் வியப்பு!!! கணினித் துறையில் சில வருடங்கள் பணியாற்றியதில், "உபசரித்தல்" சரிந்துவிட்டது போலும். எனினும், இது உயர்மனிதர்களுக்கே உரித்தான உன்னதப் பண்பு). அதற்கடுத்தும் உபசரிப்பு தொடர்ந்தது, தேனீர், தின்பண்டங்கள் என்று... பின்னர் ஆசியவியல் நிறுவனம் பற்றியும், அண்மைக் காலத்தில் ஆற்றிய சிறந்த பணிகள் பற்றியும், ஓலைச் சுவடிகள் பற்றியும், புத்த மதம் பற்றியும், தமிழ், தமிழ் கலாச்சார வரலாறு பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தோம். நேரம் சென்றதே தெரியவில்லை... எதேேச்சையாக நேரம் பார்த்தபொழுது, இரு மணித்துளிகள் உருண்டிருந்தன..
அவர் சொன்னதைக் கேட்கக் கேட்க எங்களின் மலைப்பு பன்மடங்கு அதிகமாகிக் கொண்டிருந்தது... இதைப் பற்றி அடுத்தப் பதிவில்...
Monday, May 22, 2006
ச(ஜ)ப்பானியர்களுக்குக் கோடி நன்றிகள்...
சில நாட்களுக்கு முன், தமிழார்வம்(!) கொண்ட சிலர் சேர்ந்து, சென்னை ஆசியவியல் நிறுவனம் சென்றிருந்தோம்... சென்னையின் சற்று வெளிப்புறத்தில், அமைதியான செம்மஞ்சேரி என்னுமிடத்தில், சாலையிலிருந்து சற்றுத் தொலைவில் கம்பீரமாக வீற்றிருந்தது அந்த நிறுவனம்...
பேருந்திலிருந்து இறங்கி, நிறுவனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்... தொடக்கம் முதலே காத்திருந்தது ஆச்சர்யம்... நிறுவனத் தலைவருக்குத் தொலைபேசியில் எங்கள் வருகையைப் பற்றித் தெரிவித்துவிட்டு எங்கள் நடையைத் தொடர்ந்தோம்... சற்று நேரத்தில் ஒரு மகிழுந்து எங்களை நோக்கி வந்தது... அது எங்களை நிறுவனத்துக்குக் கூட்டிச் செல்லத்தான் வந்ததென்று அப்புறம் தெரிந்தது...
நிறுவனத்தின் வாசற்படியில்... மலைத்து நின்றுவிட்டோம்... அந்த நிறுவனத்துக்குக் கட்டிடத்தை வழங்கியவர்கள் சப்பானின் "நிப்பான்" (Nippon) நிறுவனம்... உள்ளே சென்று நிறுவன மேலாளரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம்... எங்களுக்கு நிலை கொள்ளாத திகைப்பு... அங்கே முதுகலைப் பட்டம் படிப்பவர்களில் நிறையப் பேர் சப்பானியர்கள்... ஓலைச் சுவடிகளைப் படிப்பதிலிருந்து, அதை மொழியாக்கம் செய்து, புத்தக வடிவில் வெளியிடுதல் வரை அவர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிின்றது... அங்கிருந்த நூலகப் புத்தகங்களில் பாதிக்கு மேற்பட்டவை அவர்கள் எழுதியவை.... அதில் தொல்தமிழ் பற்றிய புத்தகங்கள் மிக அதிகம்...
இவற்றையெல்லாம் கண்டு கேட்டுவிட்டுத் திரும்பும் வழியில் என்னை நானே கேட்டுக் கொண்டேன்...
"அடே தமிழா!!! காலம் தொட்டுத் தமிழுக்காக, தமிழின் வளர்ச்சிக்காக, எத்தனைப் பேர், தமிழர்களல்லாத எத்தனைப் பேர், உழைக்கின்றனர்... நீ என்றாவது, ஒரு கடுகளவாவது, ஏதாவது செய்திருக்கிறாயா? அல்லது அதைப் பற்றிச் சிந்தித்தாவது இருக்கிறாயா?... என் மனம் சற்றே கனத்தது...."
என் அடுத்தப் பதிவில் ஆசியவியல் நிறுவனம் பற்றியும், தமிழின் வளர்ச்சியில் அதன் பங்கு பற்றியும் விவரிக்க நினைத்துள்ளேன்...

Monday, May 15, 2006
நாமெல்லாம் படித்தவர்கள்...
மே 8-ம் தேதி... தமிழகத்தில் தேர்தல்... அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு , பெங்களூரிலிருந்து கோவை சென்றிருந்தேன், வாக்களிக்க... 5 பேர் சேர்ந்து தங்கியுள்ளோம். அதில் நான் மட்டும் சென்றேன். சரி.. ஓட்டுப் போட்டு விட்டு, பள்ளித் தோழர்களில் சில பேரையாவது சந்தித்து வரலாம் என்று நினைத்தேன்... என்ன ஆச்சரியம்!!! ஒருவர் கூட வரவில்லை...
சில பேர் வர முயற்சிகூட எடுக்கவில்லை... வந்த மற்ற சிலரில், வேலை காரணமாக அதற்கு முந்தைய நாள் இரவே அவரவர் வேலை செய்யும் இடங்களுக்குக் கிளம்பிவிட்டனர்...
நிினைத்துப் பார்த்தேன்... சிரிப்பு வந்தது... அவர்கள் அரசியலையும், அரசியல்வாதிகளையும் விமர்சித்துச் சிரித்ததை... சிரிப்பதை... நாம் படித்தவர்கள்...
என் பாட்டி என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்... நான் எப்பொழுது ஊருக்குச் சென்றாலும் என்னைப் பார்க்கக் கிராமத்திலிருந்து வந்துவிடுவார்கள்... நான் ஊருக்குத் திரும்பும்வரை தங்கியிருந்து செல்வார்கள்... அன்றும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்... ஆனால் திங்கள் கிழமையன்று காலை விடாப்பிடியாக கிராமத்திற்குக் கிளம்பிவிட்டார்கள்... ஓட்டளித்தே தீர வேண்டுமென்று... முகத்தில் என்னை விட்டுச் செல்லும் வருத்தத்தின் நிழல் நன்றாகவே தெரிந்தது... அப்பொழுது எனக்குத் தோன்றியது... அவர்களும் படித்திருந்தால்...

Sunday, May 14, 2006
சாப்பிட வாங்க...
சென்னையில் நான் குடியிருந்த போது நிகழ்ந்த ஒரு நகைச்சுவை சம்பவம்...
வீட்டின் முன் அறையில் அமர்ந்து இரவு உணவருந்திக் கொண்டிருந்தோம். கணிணியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, ஓரளவு சத்தத்தில்... திடீரென்று கதவு தட்டப்பட்டது... திறந்தோம்... "எப்படி மனிதன் தூங்குவது, இவ்வளவு சத்தம் வைத்துள்ளீர்கள்.. காலையில் வேலைக்குச் செல்ல வேண்டாமா? உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? .... " என்று கத்த (அவரும் சத்தம் போட :)) ஆரம்பித்துவிட்டார்... அப்பொழுது என் நண்பன், "அண்ணா, சாப்பிட வாருங்க..." என்றானே பார்க்கலாம்... எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை... வந்தவர் அப்படியே நிலை குலைந்துவிட்டார்... அவருடைய குரலின் கடுமை இறங்கி இருந்தது... "பரவாயில்லை... காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும்... தூங்குவற்கு கொஞ்சம் தடையாக உள்ளது. பாடல் ஒலியைக் குறைத்துக் கொள்ளுங்கள்... " என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்... நாங்களும் குறைத்துவிட்டோம்...
எனக்கு வள்ளுவனின் வாக்கு நினைவிற்கு வந்தது...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடிவதில்லை...

Saturday, May 13, 2006
திருக்குறள் படி?
சில நாட்களுக்கு முன் என்னுடன் வேலை செய்யும் சக ஊழியரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னது...
என் சிறு வயது மகனிடம் சில திருக்குறள்களைப் பாடம் செய்யச் சொன்னேன். எதற்காகப் படிக்க வேண்டும் என்றான். படிப்பதன் நன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறினேன்... அதற்கு அவன் அளித்த பதில் என்னைத் திகைப்படைய வைத்தது... அத்துடன் விழிப்படையவும் வைத்தது. இனி உரையாடல் வடிவில்...
மகன்: நீங்கள் எவ்வளவு குறள்கள் படித்தீர்கள்?
நான் : சுமார் 300 குறள்கள்.
ம : அதில் எவ்வளவு ஞாபகம் இருக்கிறது?
நா : ஒரு 30 குறள்கள்...
ம : அந்த 30-ல் எவ்வளவு தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துகிறீர்கள்?
நா : (மனது சுருக்கென்றது...) (உதட்டைப் பிதுக்கினேன்...)
ம : நானும் அதே மாதிரிப் படித்து, என் நேரத்தை வீணாக்க வேண்டுமா?
நா : (என்ன சொல்வதென்று தெரியாமல் மலைத்து நின்றுவிட்டேன்...)
அதற்கு மேல் அவனைப் படிக்கச் சொல்ல என்னிடம் வலுவில்லை... மனதுமில்லை...
அதற்குள் தேனீர் தீீர்ந்துவிட, உரையாடல் நிறைவுபெற்றது...

Friday, May 12, 2006
கிறுக்கப் பழகுகிறேன்...
ஏதோ எழுதத் தோன்றியது... கிறுக்க ஆரம்பிக்கிறேன்...
காலை நேரம்... மகிழுந்தில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன்.
வழக்கம் போல் போக்குவரத்து விளக்கின் பச்சை நிறத்துக்காக காத்துக்கொண்டிருக்கையில், மகிழுந்துவின் ஒரு பக்க கண்ணாடி தட்டப் பட்டது... கதவின் பக்கம் பார்வையைத் திருப்பினேன்... பார்க்க பஞ்சத்தில் அடிபட்டு, உணவு உண்டு பல நாட்கள் ஆனவன் போல், கந்தலான உடையில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்... ஓ! பிச்சைக்காரன்... கதவைத் திறந்தேன்... என்ன ஆச்சர்யம்! அவன் கையில் காது குடைய உதவும் பஞ்சு நிறைந்த பொட்டலங்கள்...
அளக்க முடியா வியப்பு, என் மனதில்! இந்த வறுமையிலும் பிச்சையெடுக்காமல், உழைத்துச் சாப்பிட வேண்டுமென்றெ உறுதி அவன் கண்களில்! இருபது ரூபாயை எடுத்து நீட்டி, இரு பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டேன், உபயோகிக்க மாட்டேன் என்று தெரிந்திருந்தும்... நன்றி கலந்த பார்வையுடன் (என் பார்வைக்கு அப்படித் தான் தெரிந்தது) அடுத்த வண்டியை நோக்கி அவன் நகர, என் வண்டியும் நகர்ந்தது... விளக்கு பச்சை நிறத்துக்கு மாற....
என்றும் காணாத அளவு, மகிழ்ச்சி ஆரவாரத்தில் என் மனது...

Subscribe to:
Comments (Atom)