ஏதோ எழுதத் தோன்றியது... கிறுக்க ஆரம்பிக்கிறேன்...
காலை நேரம்... மகிழுந்தில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன்.
வழக்கம் போல் போக்குவரத்து விளக்கின் பச்சை நிறத்துக்காக காத்துக்கொண்டிருக்கையில், மகிழுந்துவின் ஒரு பக்க கண்ணாடி தட்டப் பட்டது... கதவின் பக்கம் பார்வையைத் திருப்பினேன்... பார்க்க பஞ்சத்தில் அடிபட்டு, உணவு உண்டு பல நாட்கள் ஆனவன் போல், கந்தலான உடையில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்... ஓ! பிச்சைக்காரன்... கதவைத் திறந்தேன்... என்ன ஆச்சர்யம்! அவன் கையில் காது குடைய உதவும் பஞ்சு நிறைந்த பொட்டலங்கள்...
அளக்க முடியா வியப்பு, என் மனதில்! இந்த வறுமையிலும் பிச்சையெடுக்காமல், உழைத்துச் சாப்பிட வேண்டுமென்றெ உறுதி அவன் கண்களில்! இருபது ரூபாயை எடுத்து நீட்டி, இரு பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டேன், உபயோகிக்க மாட்டேன் என்று தெரிந்திருந்தும்... நன்றி கலந்த பார்வையுடன் (என் பார்வைக்கு அப்படித் தான் தெரிந்தது) அடுத்த வண்டியை நோக்கி அவன் நகர, என் வண்டியும் நகர்ந்தது... விளக்கு பச்சை நிறத்துக்கு மாற....
என்றும் காணாத அளவு, மகிழ்ச்சி ஆரவாரத்தில் என் மனது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment