ஏற்கனவே சொன்னபடி , அந்த அமைதியான இடத்தில் காலடி எடுத்து வைத்தோம். நேராக இயக்குனர் மற்றும் இணைநிறுவனர் முனைவர். சா(ஜா)ன் சாமுவேல் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். பார்க்க மிகவும் எளிமையான உடையில், கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் மேசை நிறையப் புத்தகங்கள்... அவரே எழுதியவை பல, அவர் முன்னுரை எழுதியவை சில, ஆய்வு சம்பந்தப்பட்டவை சில என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அறைக்குள் நுழைந்த எங்கள் அனைவரையும் எழுந்து நின்று வரவேற்றார்(எங்களனைவருக்கும் பெரும் வியப்பு!!! கணினித் துறையில் சில வருடங்கள் பணியாற்றியதில், "உபசரித்தல்" சரிந்துவிட்டது போலும். எனினும், இது உயர்மனிதர்களுக்கே உரித்தான உன்னதப் பண்பு). அதற்கடுத்தும் உபசரிப்பு தொடர்ந்தது, தேனீர், தின்பண்டங்கள் என்று... பின்னர் ஆசியவியல் நிறுவனம் பற்றியும், அண்மைக் காலத்தில் ஆற்றிய சிறந்த பணிகள் பற்றியும், ஓலைச் சுவடிகள் பற்றியும், புத்த மதம் பற்றியும், தமிழ், தமிழ் கலாச்சார வரலாறு பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தோம். நேரம் சென்றதே தெரியவில்லை... எதேேச்சையாக நேரம் பார்த்தபொழுது, இரு மணித்துளிகள் உருண்டிருந்தன..
அவர் சொன்னதைக் கேட்கக் கேட்க எங்களின் மலைப்பு பன்மடங்கு அதிகமாகிக் கொண்டிருந்தது... இதைப் பற்றி அடுத்தப் பதிவில்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment