சென்னையில் நான் குடியிருந்த போது நிகழ்ந்த ஒரு நகைச்சுவை சம்பவம்...
வீட்டின் முன் அறையில் அமர்ந்து இரவு உணவருந்திக் கொண்டிருந்தோம். கணிணியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, ஓரளவு சத்தத்தில்... திடீரென்று கதவு தட்டப்பட்டது... திறந்தோம்... "எப்படி மனிதன் தூங்குவது, இவ்வளவு சத்தம் வைத்துள்ளீர்கள்.. காலையில் வேலைக்குச் செல்ல வேண்டாமா? உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? .... " என்று கத்த (அவரும் சத்தம் போட :)) ஆரம்பித்துவிட்டார்... அப்பொழுது என் நண்பன், "அண்ணா, சாப்பிட வாருங்க..." என்றானே பார்க்கலாம்... எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை... வந்தவர் அப்படியே நிலை குலைந்துவிட்டார்... அவருடைய குரலின் கடுமை இறங்கி இருந்தது... "பரவாயில்லை... காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும்... தூங்குவற்கு கொஞ்சம் தடையாக உள்ளது. பாடல் ஒலியைக் குறைத்துக் கொள்ளுங்கள்... " என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்... நாங்களும் குறைத்துவிட்டோம்...
எனக்கு வள்ளுவனின் வாக்கு நினைவிற்கு வந்தது...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடிவதில்லை...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment