Monday, May 15, 2006

நாமெல்லாம் படித்தவர்கள்...

மே 8-ம் தேதி... தமிழகத்தில் தேர்தல்... அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு , பெங்களூரிலிருந்து கோவை சென்றிருந்தேன், வாக்களிக்க... 5 பேர் சேர்ந்து தங்கியுள்ளோம். அதில் நான் மட்டும் சென்றேன். சரி.. ஓட்டுப் போட்டு விட்டு, பள்ளித் தோழர்களில் சில பேரையாவது சந்தித்து வரலாம் என்று நினைத்தேன்... என்ன ஆச்சரியம்!!! ஒருவர் கூட வரவில்லை...

சில பேர் வர முயற்சிகூட எடுக்கவில்லை... வந்த மற்ற சிலரில், வேலை காரணமாக அதற்கு முந்தைய நாள் இரவே அவரவர் வேலை செய்யும் இடங்களுக்குக் கிளம்பிவிட்டனர்...

நிினைத்துப் பார்த்தேன்... சிரிப்பு வந்தது... அவர்கள் அரசியலையும், அரசியல்வாதிகளையும் விமர்சித்துச் சிரித்ததை... சிரிப்பதை... நாம் படித்தவர்கள்...

என் பாட்டி என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்... நான் எப்பொழுது ஊருக்குச் சென்றாலும் என்னைப் பார்க்கக் கிராமத்திலிருந்து வந்துவிடுவார்கள்... நான் ஊருக்குத் திரும்பும்வரை தங்கியிருந்து செல்வார்கள்... அன்றும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்... ஆனால் திங்கள் கிழமையன்று காலை விடாப்பிடியாக கிராமத்திற்குக் கிளம்பிவிட்டார்கள்... ஓட்டளித்தே தீர வேண்டுமென்று... முகத்தில் என்னை விட்டுச் செல்லும் வருத்தத்தின் நிழல் நன்றாகவே தெரிந்தது... அப்பொழுது எனக்குத் தோன்றியது... அவர்களும் படித்திருந்தால்...

No comments: